சர்வதேச யோகா தினம் 2026-ஐ முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்கள் (Indian Navy) எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தி ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
வழக்கமாக மக்கள் பூங்காக்கள் அல்லது வீடுகளில் யோகா செய்யும் நிலையில், நமது கடற்படை வீரர்கள் கடலின் ஆழத்தில் இருக்கும் நீர்மூழ்கி கப்பலுக்குள் (Submarine) யோகா பயிற்சி செய்து அசத்தியுள்ளனர்.
மிகக் குறைவான இடவசதி மற்றும் கடுமையான சவால்கள் நிறைந்த நீர்மூழ்கி கப்பலின் சூழலிலும், வீரர்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் பல்வேறு யோகாசனங்களைச் செய்து தங்களின் அசாத்திய உடல் தகுதியையும், அர்ப்பணிப்பையும் நிரூபித்துள்ளனர்.
Indian Navy Submariners celebrate International Yoga Day 2026! 🇮🇳#tadc #mundialdefútbol2026 #गोवर्धनपरिक्रमा_केअनसुनेरहस्य pic.twitter.com/8Bp9Xk1dS0
— Niranjan Sahu (@N_Sahu_11) June 21, 2026
இந்த ஆண்டு யோகா தினமானது ‘Yoga For Healthy Ageing’ (சுமூகமான வயோதிகத்திற்கு யோகா) என்ற மையக்கருத்தை முன்னிறுத்தி கொண்டாடப்படும் வேளையில், எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தவே வீரர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள் தங்களின் கடினமான பணிக்கு இடையிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்க மேற்கொள்ளும் இந்த அசாத்திய முயற்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி, ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பெருமிதம் கொள்ள வைத்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.
