சாலையில் மிகவும் கஷ்டப்பட்டு நடப்பது போலவும், காலில் பலத்த காயம் அடைந்தது போலவும் நடித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நூதன மோசடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் கையில் ஊன்றுகோல் ஏந்தி, ஒரு காலை இழுத்தபடி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றுள்ளார். அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தாராளமாக பண உதவி செய்துள்ளனர்.

அனைவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபர், ஒரு தெருமுனைக்குச் சென்றதும் யாரும் பார்க்கவில்லை என நினைத்து, தான் கையில் வைத்திருந்த ஊன்றுகோலைத் தூக்கி எறிந்தார். அதுவரை நடக்க முடியாமல் திணறியவர், அடுத்த நொடியே எவ்வித பாதிப்பும் இன்றி மிக இயல்பாக நடந்து சென்றார். இந்த மொத்த நாடகமும் அங்கிருந்த காரின் முகப்பு கேமராவில் (Dashcam) பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் உதவி கேட்பவர்கள் அனைவரையும் சந்தேகப்படத் தேவையில்லை. இருப்பினும், இதுபோன்ற போலி வேடமிட்டு ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்யும் முன் அவர்களின் உண்மைத் தன்மையை ஒருமுறை கவனிப்பது அவசியம்,” என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.