இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, ஐஸ்கிரீமில் பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நிகோல் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு சம்பவ நாளில் அவினாஷ் என்பவர் தன் மனைவியுடன் சாப்பிட சென்ற நிலையில் அவர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர்.

அப்போது கொண்டு வந்த சாம்பாரில் ஏதோ மிதந்தது போல் தெரிந்ததால் அவினாஷ் அதை பார்த்தார். அப்போது எலி ஒன்று  செத்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஊழியர்களிடமும் நகராட்சி நிர்வாகத்திற்கும் அவினாஷ் தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று  சோதனை நடத்தினர். மேலும் இதைத் தொடர்ந்து ஹோட்டலை பூட்டி அவர்கள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.