சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம் பல மணி நேரத்திற்கு பிறகு தான் அதை சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதைவிட மிக கொடூரமான விஷயமாகத்தான் இருக்கிறது. இங்கு புவி வெப்பமயமாதல் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. பருவமழை என்பது இனிமேல் இருக்காது. மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நம் தயாராக இல்லை என்றால் இப்படி புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என கூறினார்.

எச் ராஜா மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் அதானி தமிழ்நாட்டுக்கு வரும்போது யாரை பார்க்க வந்தார் என கேட்டால் பதில் அளிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் ஒரு ஆள் இல்லை. அவருக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வேலை இல்லை என பதில் கூறுகிறீர்கள். எச் ராஜா அவதூறு பேசிவிட்டார் என கூறுவதை விடுங்கள். அதைவிட அதிகமாக வலைதளங்களில் அவதூறு பரப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அல்லது அவற்றை பற்றி அரசுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.