ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில், நோக்கா பகுதியில் அரிதான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிளாஸ்டிக் போன்ற கடின தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள செய்தி மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் பிறந்துள்ளனர். குழந்தைகளின் எடைகள் ஆண் குழந்தைக்கு 1.5 கிலோ மற்றும் பெண் குழந்தைக்கு 1.53 கிலோ என பதிவாகியுள்ளது.
மருத்துவ ரீதியாக இதற்கு “ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ்” (Harlequin-type ichthyosis) எனப்படும் ஒரு அரிய நோய்க்குறியீடு உள்ளது. இதுபோன்ற நிலை இந்தியாவில் இதுவரை பதிவாகாத நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இவ்வகை குழந்தைகள் அசாதாரண தோல் அமைப்புடன் பிறக்கின்றனர். அவர்களின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் சிறப்பான மருத்துவ பராமரிப்பின் கீழ் வளரிளம் பருவம் வரை உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.