கேரளாவில் உள்ள அனக்கரா பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் செல்போன் உபயோகப்படுத்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் செல்போன் கொண்டு வந்துள்ளான். இதனை ஆசிரியர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.‌ அந்த மாணவனிடம் வகுப்பறையில் வைத்து செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று ஆசிரியர்கள் கூறிய போதிலும் அதை கண்டுகொள்ளாத சிறுவன் செல்போனை பயன்படுத்தினான். இதன் காரணமாக அந்த ஆசிரியர் செல்போனை மாணவனிடம் இருந்து வாங்கிக் கொண்டார். இதனால் கோபத்தில் அந்த மாணவன் ஆசிரியரிடம் தகராறு செய்ததால் பின்பு செல்போன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்த மாணவன் தலைமையாசிரியர் அறைக்கு சென்று மிகவும் கோபமாக பேசினான். அந்த மாணவன் தன்னுடைய செல்போனை தருமாறு மிகவும் ஆவேசத்துடன் பேசிய போதிலும் தலைமை ஆசிரியர் அமைதியாக இருந்தார். பின்னர் அந்த மாணவன் என்னுடைய செல்போனை மட்டும் தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொலை செய்து விடுவேன் என்ற தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டினான். ஆனால் இது பற்றி மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் கொடுக்காத நிலையில் பெற்றோரை வரவழைத்து விஷயத்தை கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியரை மாணவன் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும்  நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

https://twitter.com/TheSouthfirst/status/1881717670258581799?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1881717670258581799%7Ctwgr%5E17941a5b508ff1c7159760f5b3189c4061540789%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-39291988554118015702.ampproject.net%2F2410292120000%2Fframe.html