தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அஜித் நற்பணி மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த துணிவு திரைப்படத்தின் டிக்கெட்டுகளை மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.