வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றார்.

மேலும், அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.