
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ரோப் சேவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் அமல்படுத்த இருக்கிறது. அதாவது மத்திய அரசு ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழகம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் ரோப் கார் சேவையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் சேவை செயல்படுத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பான முதல் கட்ட வேலைகளில் மத் திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்ட ஆய்வு பணிகள், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வுகள் போன்ற பல்வேறு விதமான சோதனைகளின் முடிவில் ரோப் கார் சேவை செயல்படுத்தப்படும். மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை வந்துவிட்டால் பழனிக்கு அடுத்தபடியாக சென்னை மாறிவிடும். இந்த ரோப் கார் சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாத சமூகமான பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்கான வரவேற்பு கொடுத்து சென்னை மாநகராட்சி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.