இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுவாக பெண்கள் தான் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி புகார்கள் கொடுப்பார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக மணமகன் ஒருவர் தனக்கு கட்டாயமாக மணமகள் வீட்டில் வரதட்சணை கொடுத்ததாக கூறி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் டெல்லியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஏற்கனவே மணமகள் வீட்டார் மணமகன் மீது கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி போலீசில் வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக கூறி புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதில் மணமகன் வங்கி கணக்கில் ரூபாய் 75 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது மணமகள் வீட்டார் புகார் கொடுத்ததால் அந்த வழக்கை திசை திருப்புவதற்காக தான் மணமகன் இப்படி ஒரு புகாரை தெரிவித்துள்ளதாக மணமகள் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதன் காரணமாக இரு தரப்பும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு தான் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.