பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை பற்றி சர்ச்சையாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டார் ஈபிஎஸ். இது பாஜகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்த முடிவு எடுத்துள்ள பாஜக, மாநில தலைவர் அண்ணாமலையை ஓரம் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளுக்கு குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.