தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக சரண்ராஜ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சென்னை மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்த இவர் வெற்றிமாறனின் வட சென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சரண்ராஜ் கே கே நகர் ஆற்காடு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் வேகமாக சரண்ராஜ் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.