
இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருக்கும் நீரஜ் சோப்ரா இந்தியாவின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரர் ஆவார்.
சமீபத்தில் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹிமானி ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் விரைவில் தேசிய அளவில் இந்தியாவுக்காக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீரஜ் சோப்ரா தன்னுடைய திருமணத்தின் போது வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சனை பெற்றுக் கொண்டு தன் மகளை திருமணம் செய்து கொண்டதாக ஹிமானியின் தந்தை கூறியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணை பெற்றுக் கொண்டு தன் மகளை திருமணம் செய்து கொண்டதாக அவருடைய மாமனார் சந்திரம் மோர் தெரிவித்துள்ளார். அதோடு டிரஸ் உளளிட்ட வேறு எந்த ஒரு பொருளும் வேண்டாம் என்றும் கூறிவிட்டாராம். மேலும் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.