தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கையில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மருது பாண்டியர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, அனைத்து அரசு துறைகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படும். 30 கோடி ரூபாய் செலவீட்டில் காரைக்குடி நகராட்சிக்கும் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இருட்டில் அமர்ந்து கொண்டு அமாவாசையை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

திண்ணையில் அமர்ந்து கொண்டு வெட்டி கதை பேசுவது போல் இபிஎஸ் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார். திமுக அரசின் செயல் திட்டங்களோடு அதிமுகவின் 10 ஆண்டுகால செயல்பாடுகளை ஒப்பிட தயாரா என்று முதல்வர் சவால் விட்டார். மேலும் திமுக அரசு கொடுத்த 550 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.