மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையோ, அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதனை கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 16.3 சதவீதம் அதிகரிப்பாகும். அதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் வெங்காய ஏற்றுமதி மதிப்பு முந்தைய மாதத்தை விட இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதேசமயம் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.