கேரள மாநிலத்தில் உள்ள அவியம் கோடு பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லிஜின் தாஸ் கேட்டரிங் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அதே பகுதியில் வசிக்கும் அனிஷ்குமார் என்பவருடன் காரில் குளச்சல் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சமையல் வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் கல்லாம்பொற்றை பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வீட்டு சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த லிஜின் தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனிஷ் குமரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.