தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி உடன் விசாரணை நடத்த உள்ளார். செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி கேட்டறிய இருக்கிறார். அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி விசாரிக்க உள்ளார் .