கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கையானது 39ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு பாஜக சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.