ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மற்றும் திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையேயான விரைவு ரயில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மற்றும் திருப்பதி விரைவு ரயில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி மற்றும் திருப்பதி இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே மறு மார்க்கத்தில் திருப்பதி மற்றும் விழுப்புரம் விரைவதையில் திருப்பதியில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.