விளையாட்டாகவே கல்லை வீசினேன்..! இதெல்லாம் ஒரு குத்தமா…? அமைச்சர் விளக்கம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று இருந்த அமைச்சர் நாசர், அமர்வதற்கு சேர் எடுத்து வர கூறி இருக்கிறார். ஆனால் சேர் எடுத்து வர சற்று தாமதமானதால் ஆத்திரமடைந்த அவர் கட்சி நிர்வாகியை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக திட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அமைச்சர் நாசர், எல்லோருக்கும் சேர் எடுத்து வர சொன்ன போது, ஒரு சேர் மட்டும் எடுத்து வந்ததால் விளையாட்டாகவே கல்லை வீசினேன். இதில் எந்த கோபமோ, அடாவடியோ, அடிமையாக நினைக்கும் போக்கோ துளியளவும் இல்லை. கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்னா என்ன பண்றது? என்றார்.

Leave a Reply