பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர்  அமிதாப்பச்சன். இவர் அண்மையில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார். இவ்விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா எனும் வார்த்தையை பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து டெல்லியிலுள்ள சுதந்திர மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேசியக் குழு அமிதாப்பச்சனுக்கு எதிராக ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அவற்றில் “நீங்கள் விளம்பரப்படுத்தி உள்ள பிஸ்கட் கோதுமையில் தயாரிக்கப்பட்டது என கூறியதன் வாயிலாக நுகர்வோரை தவறாக வழி நடத்தியிருக்கிறீர்கள்.

பிஸ்கட் அதிகமான சர்க்கரை, அதிகமான கொழுப்பு, அதிகமான சோடியம் போன்றவற்றால் ஆனது. ஆகவே இது குழந்தைகளின் உடல்நலத்துக்கு உகந்தல்ல. இதனால் இவ்விளம்பரம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பாதிக்கும் என அஞ்சுகிறோம்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்திற்கு அமிதாப்பச்சன் தரப்பிலிருந்து இன்னும் பதிலளிக்கவில்லை. இதன் காரணமாக அடுத்த வாரம் 2வது கடிதத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.