இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத்திகளும் விராட் கோலி உலக அளவில் ஒரு புகழ் பெற்ற வீரராக கருதப்படும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தற்போது சரியான பார்மில் இல்லாமல் விராட் கோலி இருக்கிறார். முன்னதாக விராட் கோலி மிகவும் தடுமாறிய நிலையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதேபோன்று ஐபிஎல் போட்டியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலி இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார் என்று கேட்டது. அப்போது மக்கள் விரும்பும் வரை விராட் கோலி விளையாடுவார் என்று கூறியவர் மக்களின் கைகளில் தான் அது இருக்கிறது என்றார். மேலும் தன்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் 2027 ஆம் ஆண்டு வரை விராட் கோலி விளையாடுவார் என்றும் கூறினார்.