தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து தென்கொரிய தலைநகர் சியோலுக்கு புறப்பட்ட கொரியன் ஏர் விமானத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு பயணி Exit கதவுக்கு அருகே அமர்ந்து கதவை திறக்க முயன்றார். விமான ஊழியர்கள் அதை கவனித்து, அவரை மீண்டும் அவரது இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் பயணி அவர்களுக்கு எதிராக பதில் கூறி, Exit கதவுக்கு நெருங்கி கதவை திறக்கப் போவதாக கத்தினார். பதறிய விமான ஊழியர்கள் உடனடியாக அவசரமாக அவரை பிடித்து கட்டுப்படுத்தினர். இதனையடுத்து விமானம் சியோலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பாதுகாப்பு படையினரிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார். இந்த பரபரப்பான சம்பவம் சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.