நடிகர் விஜய் கூடிய விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறார் என சொல்லப்படும் நிலையில், அதற்கு பல தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

ஒவ்வொரு மாணவரின் குடும்பத்தினருடன் நின்று விஜய் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். இந்த நிலையில் விஜய் செய்த விஷயத்தை அஜித் 20 ஆண்டுகளுக்கு முன்பே செய்து விட்டார் என பழைய புகைப்படம் ஒன்றை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி இருக்கின்றனர்.