தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதாவது, என்னை ஒவ்வொருத்தரும் அவங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சுட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல அவங்களுக்கு எங்க, என்ன பிரச்சனை நடந்தாலும், அவங்களோட உரிமைகளுக்காகவும், அவங்களோட உணர்வு பூர்வமாக இருப்பேன். எப்போதும் அப்படித்தான் இருப்பேன்.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்கள் அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் குரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்களோட சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.
விஜயின் பேச்சுக்கு பலரும் ஆதரவும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதாவது, விஜய் மைனஸ் ஆக போகிறார். திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அரசியலுக்கு வந்துள்ளார். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. எந்த சக்தியாலும் கூட்டணியை பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.