நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை இன்று  நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

ஆனால் தாம்பரம் தொகுதியில் 10ம் வகுப்பில் 492, 491 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பதில், அதைவிட குறைவாக 486 மதிப்பெண் எடுத்த மாணவரை விழாவுக்கு அழைத்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவர்கள் கேள்வி எழுப்பியும் பதிலும் இல்லை என கூறப்படுகிறது. இந்த குளறுபடி இன்னும் எத்தனை தொகுதியில் நடந்துள்ளது என தெரியவில்லை.