![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/BeFunky-collage-64.jpg)
சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் விசிக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது விழாவில் பேசும்போது திமுகவை நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே தமிழ்நாட்டில் வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர் திமுகவை நேரடியாகவே விமர்சித்து மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜகவை ஒழித்த நிலையில் இனி வரும் தேர்தலில் மன்னர் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆக ஆகக்கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு கேள்வி கேட்டால் சங்கி என்று அழைப்பதா என்று கூறினார். மேலும் திருமாவளவன் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய மனது இங்கு தான் இருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு உள்ளது என கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுன் நேரடியாக திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருமாவளவன் விஜயுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை எனக் கூறிய நிலையில் ஆதவ் அர்ஜுனா நீங்க களத்திற்கு வாங்க விஜய் என நேரடியாக அழைத்தது, இனி 2026- ல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு வேலை பார்ப்பவர் ஆகிவிட்டார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா என்று அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான ஆளூர் ஷநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிறகு அரசியல் கணக்கு இருக்கிறது என கூறிய அவர் ஆத்வ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை திருமா எடுப்பார் என தெரிவித்துள்ளார். இதனால் ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.