விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த பிறகு விஜய் பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜயின் பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் விஜய் திமுக கட்சியை விமர்சித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, விஜயின் அரசியல் வருகை மற்றும் அவரின் அறிவிப்புகள் திமுக கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.