விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக மற்றும் அதிமுக தனித்தனியே களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில்…. நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு மாநில அந்தஸ்தை பெற்ற நாம் தமிழர் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்று மாநில அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.