எல்ஐசி நிறுவனம் எல்ஐசி சாரல் பென்ஷன் என்ற திட்டத்தை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும்போது வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் பென்ஷன் தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். ஒரே முறையாக முதலீடு செய்து விட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 3000 ரூபாய் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 6000 ரூபாய் அல்லது வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் என பென்ஷன் பாலிசிதாரருக்கு கிடைக்கும். இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களை அறிவதற்கு அருகில் உள்ள எல்ஐசி கிளையை அணுகலாம்.