உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் பொது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Drawing கருவியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் செயலி மூலமாக தொடர்பு கொள்பவராக இருந்தால் உங்களுக்கான புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் தற்போது எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக call link ஐ உருவாக்கிக் கொள்ளலாம். இதில் பயணங்கள் உருவாக்கியவுடன் பயனரின் சாதனத்தின் முகப்பு திரையில் தானாகவே சேர்க்கப்பட்டு விடும். அதனால் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டை திறந்து அந்த நபரின் பெயரை தேட வேண்டாம். இந்த அம்சம் ஒரே நபருக்கு அடிக்கடி தொடர்பு கொள்ள பெரிது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.