இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே காலையில் எழுந்ததும் வாசலில் மாட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலம் போடும் ஒரு உன்னதமான பழக்கத்தை இந்துக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
அதன் மூலமாக வீட்டுக்குள் கிருமிகள் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதுடன் ஏனைய உயிர்களுக்கும் உணவு கொடுக்கும் புண்ணியம் அவர்களுக்கு கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். இதனை மனிதர்களுக்கு மட்டுமல்ல பசியோடு இருக்கும் எந்த உயிர்களுக்கும் உணவு கொடுத்து மனதாரலாம். இதற்கு எடுத்துக்காட்டாக வாசலில் போடப்பட்ட அரிசி மா கோலத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் பசியாறும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க