ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித் துறை நினைவுபடுத்தும் அடிப்படையில் உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும். வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமானத்தை தாக்கல் செய்து விட்டால் மட்டும் இந்த ஐடிஆர் தாக்கல் செயல்முறை முடிந்து விடாது. வரி செலுத்துவோர் தங்களது வருமான ஆதாரங்களை சரிபார்ப்பது அவசியமாகும்.
இந்த சரிபார்ப்பினை ஆன்லைன் (அ)ஆப்லைனில் செய்து முடிக்கலாம். ஐடிஆர் தாக்கல் செய்வதற்குரிய ஆன்லைன் சரிபார்ப்பை ஆதார் ஓடிபி, வங்கிக்கணக்கு, நெட் பேங்கிங் (அ) டிமேட் கணக்குகள் மூலம் சரிபார்க்கலாம். அதே நேரம் நீங்கள் ஆப்லைனில் சரிபார்க்க வேண்டும் எனில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள சென்ட்ரலைஸ்ட் ப்ராசஸிங் சென்டர்(சிபியூ) வாயிலாக சரிபார்க்க வேண்டும். இது தவிர்த்து ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரித் துறையின் இ-பைலிங் போர்ட்டல் வாயிலாகவும் சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஒரு தனி நபரின் ஆண்டு வருமானம் ரூபாய்.2.5 லட்சத்துக்கும் மேல் இருப்பின் அவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித் துறை நிர்ணயித்த காலத்திற்குள் நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூபாய்.10,000 வரை உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறுகள்(அ) தாமதம் நிகழ்ந்தால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். இதன் காரணமாக நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.