சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்தார் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.