பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு சமீபத்தில் சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இந்த விருதை தொடர்ந்து மேலும் இரு சர்வதேச விருதுகளுக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்நிலையில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்டிஆர் எனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக மார்வெல் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார். மார்வெல் கதாபாத்திரங்களில் அயன் மேன் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் மார்வெல் உயர் அதிகாரி விக்டோரியா அலோன்சாவை சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக ஜூனியர் என்டிஆருக்கு மார்வெல் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.