அதிமுக-வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும்தான் இருக்கிறது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளருக்கு வந்த கடிதத்தினை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா…? வாங்க மாட்டேன் என்று திருப்பி அனுப்புவது. இபிஎஸ் மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுத்துவிட்டு ஓபிஎஸ்-ன் தலைமையை ஏற்றுக் கொள்ளட்டும் என்று விமர்சித்து கூறியுள்ளார்.