பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.
இந்த படம் ரிலீஸ் ஆன 5 நாட்களில் 543 கோடி வசூல் செய்ததாக படக்குழு சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் பதான் திரைப்படத்தின் 8 நாள் வசூல் விவரம் தொடர்பான அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் பதான் படம் 417 கோடியும், உலக அளவில் மொத்தமாக 667 கோடியும் வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் பதான் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருவதால் இனி வரும் நாட்களில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.