வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகின்றார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டு ராணுவம் அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைக்கிறது. இதனிடையே ஷேக் ஹசீனா நாட்டை விட்டு விட்டதாக ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார். 1966-ல் டாக்காவில் பிறந்த வாக்கர், சரஹ்னாஸ் கமலிகா ஜமான் என்ற பெண்ணை மணந்தார். இவர் கடந்த ஜூன் 23 அன்று இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார். தற்போது அவர் வழிகாட்டுதலில் ஆட்சி நடக்கவுள்ளது.