உத்திரபிரதேசத்தில் பேராசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தில் நவ்யுக் இன்டர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ராஜேந்திர பிரசாத் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் செல்போன் கொண்டு வந்துள்ளனர். அதனை பார்த்த ராஜேந்திரன் பிரசாத் செல்போனை கைப்பற்றினார். இதனால் கோபமடைந்த மூன்று மாணவர்கள் ராஜேந்திர பிரசாத்தை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்து அலறி துடித்த ராஜேந்திர பிரசாத்தை சக பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்ற அந்த மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் பேராசிரியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.