வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “லியோ” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தின் புரோமோ வீடியோவில் இடம்பெற்ற அனிருத்தின் பாடலானது ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது. இதையடுத்து அப்பாடலை தனி பாடலாக வெளியிடுமாறு அவரை கேட்டு  வந்தார்கள். இந்நிலையில் அந்த பாடல் உருவாகிய விதத்தை ஒரு வீடியோ வாயிலாக வெளியிட்டு இருக்கிறார் அனிருத்.