இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அச்சம்மாவை மற்ற ஊழியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது ரோமன் ஹக் என்பவர் செவிலியரை கத்திரிக்கோலால் குத்தியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் ஏற்பட்ட கோபத்தில் ரோமன் அச்சம்மாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.