தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் பலர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை என்ற குற்றசாட்டு எழுந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி இன்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் 75 சதவீதம் அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பலரும் பொங்கல் பரிசை பெறவில்லை. மேலும் இதன் காரணமாக இன்று மாலை வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெறலாம் எனவும் இன்றுதான் கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.