தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சென்னையில் வருகிற 25ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யலாம். இந்த குறைதீர் முகாம் சென்னையை தொடர்ந்து அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் நடைபெறும். மேலும் இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் நம்பர் மாற்றுதல் போன்ற சேவைகளை செய்து கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.