தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் தற்போது அஜித்தின் கட் அவுட்டுக்கு மாலை போடுவதற்காக சுமார் 7.35 லட்சம் செலவில் பிரம்மாண்ட மாலையை தயார் செய்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இவ்வளவு லட்ச ரூபாய்க்கு அஜித் கட்ட வீட்டுக்கு மாலையா என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.