பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கண்டன கோஷம் எழுப்பினர். அதன்பின் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு அரசு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கரும்புக்கு ரூ.33 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு ரூ.15 முதல் ரூ.18 வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். அரசு சார்பாக 1 கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.2.19 கோடி கரும்புகள் வாங்க ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.