நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி சிம் கார்டு தேவையை தொடங்கிய போது freedom offer என்ற பெயரில் கோடி கணக்கானோருக்கு பல மாதங்கள் இலவச சேவையை ஜியோ வழங்கியது. அதேபோல் 5ஜி AIR Fiber வயர்லெஸ் இணையதள சேவையை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு freedom offer ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று வரை அதில் இணைவோருக்கு 30 சதவீதம் கட்டண சலுகையும் ஆயிரம் ரூபாய் இணைப்பு கட்டண தள்ளுபடியும் அறிவித்துள்ளது. எனவே இன்று கடைசி நாள் ஆகும்.