இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பயனடைவதற்காக பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதி உதவி மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் செம்மறி ஆடு மற்றும் பிற கால்நடை வளர்ப்போருக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

தேசிய லைவ் ஸ்டாக் மிஷன் இன் மூலமாக கடன்களை வழங்குகின்றது. ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். தகுதியானவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை மானியமும் உள்ளது. 500 பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் 25 ஆண் ஆடுகளை கொண்டிருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் சான்றுகளுடன் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.nlm.udyamimitra.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.