தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சுதா கங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 44-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் ஜூன் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் படத்தில் நடிப்பதற்கான காஸ்டிங் கால் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் 8 வயது முதல் 80 வயது வரை இருப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும், ஆண் பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என்றும் மொழி தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் நடிப்பை பிரதிபலிக்கும் விதமாக 1 முதல் 3 நிமிடம் வீடியோவை எடுக்க வேண்டும். மேலும் இந்த வீடியோவை பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களுடன் சேர்த்து 750011050 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.