ஆஸ்திரேலியா நாட்டில் பெரன் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு உயிரியலாளர். இவர் கொசுக்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தன்னுடைய ஆய்வகத்தில் கொசுக்களை உற்பத்தி செய்து வளர்க்கிறார். இவர் வினோதமாக கொசுக்களுக்கு உணவளிப்பதற்காக தன் கையை நீட்டி ரத்தத்தை அவைகளுக்கு கொடுக்கிறார்.

பொதுவாக விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக ரத்த தானம் கொடுக்கும் நிலையில் ஒருவர் கொசுக்களுக்கே இரத்ததானம் வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கையில் இருக்கும் கொசுக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இதனால் அவரை கொசு மனிதன் என்று அழைக்கிறார்கள். மேலும் ‌இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 60 Second Docs (@60secdocs)