தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என பிரதமர் மோடி வருந்துகிறார். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர் எட்டு நாள் கூட நிற்காது. ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.